
ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கான் தலையில் இருந்த டாட்டூவின் மர்மம் விலகியது
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் இயக்குனர் அட்லீ, முதல்முறையாக பாலிவுட்டில் இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.
ஹிந்தி படவுலகின் ஜாம்பவான் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடிக்க, நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோன் போன்ற பல நடிகைகள் நடிக்க உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரீவ்யூ வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
அந்த வீடியோவில் இரு மாறுபட்ட வேடங்களில் ஷாருக் நடிப்பது போல காட்டப்பட்டது.
ஸ்டைலிஷான ராணுவ வீரனாக ஒரு வேடமும், மொட்டை தலையுடன் ஒரு வேடமும் இடம்பெற்றிருந்தது.
அதில் அனைவரையும் கவர்ந்தது, மொட்டை தலை ஷாருக் தான். குறிப்பாக, அவரின் தலையில் இருந்த ஒரு வித்தியாசமான டாட்டூ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தற்போது வெளியாகியுள்ளது. இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஜவான் டாட்டூ!
The tattoo on #ShahRukhKhan's head from #JawanPrevue is "माँ जगत जननी " = Mother of the world.#Jawan pic.twitter.com/FOBUlxOwOl
— Manobala Vijayabalan (@ManobalaV) July 13, 2023