Page Loader
'ஜவான்' திரைப்படம் - பட்டையை கிளப்பிய முதல் நாள் வசூல் விவரம் 
'ஜவான்' திரைப்படம் - பட்டையை கிளப்பிய முதல் நாள் வசூல் விவரம்

'ஜவான்' திரைப்படம் - பட்டையை கிளப்பிய முதல் நாள் வசூல் விவரம் 

எழுதியவர் Nivetha P
Sep 08, 2023
03:10 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து நேற்று(செப்.,7) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'ஜவான்'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. படத்தின் மீதான விமர்சனங்களும் மிக பாஸிட்டிவாகவே உள்ளது. இந்நிலையில் இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடி வசூலினை பெற்றுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இந்தியாவில் மட்டும் முதல்நாள் டிக்கெட்டுக்கள் மொத்தம் 26,89,361 விற்பனையாகியுள்ளது என்று சமீதிபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.

வசூல் 

'பதான்' படத்தின் முதல்நாள் வசூலினை முறியடித்த 'ஜவான்' 

'ஜவான்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியில் மட்டும் ரூ.65.50 கோடி என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழில் ரூ.6.41கோடியும், தெலுங்கில் ரூ.5.29 கோடியும் வசூலாகியுள்ளது என்றும், இந்தியாவில் மொத்தம் ரூ.72.46 கோடி வசூலினை இப்படம் ஈட்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது. அதிரடி மற்றும் த்ரில்லர் கதைக்களத்தினை இப்படம் இந்திய மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஒவ்வொரு காட்சியமைப்பிலும் இதுவரை இல்லாத அளவில் இப்படத்தில் பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முன்னதாக ஷாருக்கான் நடித்து மிகப்பெரிய ஹிட்டான 'பதான்' படத்தின் முதல்நாள் வசூலினை 'ஜவான்' திரைப்படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.