NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலிக்கும் நபர் இவர்தான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலிக்கும் நபர் இவர்தான் 
    ஷிகர் பஹாரியா, அரசியல்வாதியும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலிக்கும் நபர் இவர்தான் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2024
    12:16 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

    இவர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். சமீபத்தில் அவர் தெலுங்கு திரைப்படவுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.

    RRR படத்தின் நாயகன் Jr.NTR உடன் தேவரா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்ற நபருடன் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்.

    இது பற்றி சமீபத்திய கரண் ஜோஹரின் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கூட, ஷிகர் தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் எப்போதும் ஆதரவாக, எதையும் எதிர்பார்க்காமல் உடன் நிற்பவர் என தெரிவித்திருந்தார்.

    வருடந்தோறும் ஜான்வி திருப்பதி கோவிலுக்கு செல்லும்போது, அவருடன் ஷிகர் வரத்தவறுவதில்லை.

    ஜான்வி கபூர் 

    சூசகமாக, காதலை வெளியுலகிற்கு தெரிவித்தார் ஜான்வி

    எனினும் அவருடன் காதலில் இருப்பது குறித்து மழுப்பலான பதிலை தெரிவித்து வந்த ஜான்வி, நேற்று நடைபெற்ற படவிழா ஒன்றி, ஷிகரின் பெயர் பொறித்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார்.

    இதன்மூலம், அவர் ஷிக்கரை காதலிப்பதை உறுதி செய்துள்ளார் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

    ஷிகர் பஹாரியா, அரசியல்வாதியும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.

    முன்னதாக, சில காலம் ஷிகரும் ஜான்வியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் பின்னர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

    தற்போது இந்த ஜோடி கடந்த ஆண்டு மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது.

    இருவரும் பெரும்பாலான நேரங்களில் ஜோடியாகவே தோன்றுகின்றனர்.

    ஷிகர் பல சந்தர்ப்பங்களில் போனி கபூர் மற்றும் அர்ஜுன் கபூருடனும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்ரீதேவி
    பாலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ஸ்ரீதேவி

    நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள் கூகுள்
    ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர் நடிகைகள்
    நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகர் சூர்யா

    பாலிவுட்

    தலைவர்170 படப்பிடிப்பில் நடிகை ரித்திகா சிங் காயம் ரஜினிகாந்த்
    உலக அழகி ஐஸ்வர்யா ராய் விவாகரத்து கோரப்போகிறாரா? பாலிவுட் கிசுகிசு ஐஸ்வர்யா ராய்
    ராஷ்மிகா மந்தனா, கஜோல், கத்ரீனா கைஃப், ஆலியா பட்டை தொடர்ந்து டீப்ஃபேக்கில் சிக்கிய பிரியங்கா சோப்ரா டீப்ஃபேக்
    ஹ்ரித்திக் ரோஷன்- தீபிகா நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியானது படத்தின் டீசர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025