LOADING...
ஜனநாயகன் பட விவகாரம்: எடிட்டர் பிரதீப் ஈ.ராகவ் இடைநீக்கம்; தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை
ஜனநாயகன் பட விவகாரத்தில் எடிட்டர் பிரதீப் ஈ.ராகவ் இடைநீக்கம்

ஜனநாயகன் பட விவகாரம்: எடிட்டர் பிரதீப் ஈ.ராகவ் இடைநீக்கம்; தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 24, 2026
07:46 pm

செய்தி முன்னோட்டம்

ஜனநாயகன் திரைப்படத்தின் ஆன்லைன் கசிவு மற்றும் சங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட எடிட்டர் பிரதீப் ஈ.ராகவை, தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. தனது படங்களில் சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்களை உதவியாளர்களாகப் பணியமர்த்தியது மற்றும் படத்தின் கசிவுக்குக் காரணமாக இருந்த தனது கவனக்குறைவை அவர் ஒப்புக்கொண்டது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறையின் தரத்தையும், சங்கத்தின் கட்டுப்பாட்டையும் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

விதிமீறல்கள்

விதிமீறல்களும் சங்கத்தின் விளக்கமும்

சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், பிரதீப் ஈ.ராகவ் தனது திட்டங்களில் சங்கத்தின் விதிகளைத் தொடர்ந்து புறக்கணித்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, படப்பிடிப்புகளில் சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்களைப் பணியில் அமர்த்தியது சங்கத்தின் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தின் ஆன்லைன் கசிவில் நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும், தனது கவனக்குறைவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்பதை அவர் ஒப்புக்கொண்டது சங்க நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை

எதிர்காலத் தற்காப்பும் சங்கத்தின் எச்சரிக்கையும்

ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற அவசரக் செயற்குழு கூட்டத்தில், முன்னணி எடிட்டர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் இந்த இடைநீக்கம் முடிவு செய்யப்பட்டது. திரைப்படத் துறையின் நற்பெயரைக் காக்கவும், இதுபோன்ற விதிமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கை அவசியம் என்று சங்கம் கருதுகிறது. இடைநீக்க காலத்தில், பிரதீப் ஈ.ராகவிற்கு எந்தவொரு ஒத்துழைப்பும் வழங்கப்படாது என்றும், மற்ற சினிமா அமைப்புகளும் இந்த முடிவை ஆதரிக்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

சைபர் கிரைம்

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

ஜனநாயகன் திரைப்படம் சென்சார் வாரியத்தின் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த விவகாரம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போலீசார், ஏப்ரல் 15 ஆம் தேதி முக்கியக் குற்றவாளிகள் மூவரைக் கைது செய்தனர். ஏற்கனவே இந்த பைரஸி வழக்கில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் திரைப்படத்தை சமூக ஊடகங்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் ஒளிபரப்பக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Advertisement