திரையரங்க வசூலில் சாதனை படைக்கும் 'ஜன நாயகன்': ஆகஸ்ட் 21-ல் ஜீ5 தளத்தில் ஓடிடி ரிலீஸ்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் இறுதி படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் வசூல் விவரங்கள், ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. சாக்னில்க் தரவுகளின்படி, 'ஜனநாயகன்' திரைப்படம் 14 நாட்களில் இந்தியாவில் மொத்தமாக ரூ. 213.81 கோடியும், நிகர வசூலாக ரூ. 183.35 கோடியும் ஈட்டியுள்ளது. ஜூலை 23 அன்று வெளியான இத்திரைப்படம் 14-வது நாளில் 3,980 காட்சிகளில் இருந்து ரூ. 1.8 கோடி நிகர வசூலையும், ரூ. 2.07 கோடி மொத்த வசூலையும் பெற்றுள்ளது. இதன் மூலம் திரையரங்குகளில் இதன் வசூல் வேகம் சற்று குறைந்துள்ளது தெரியவருகிறது.
வசூல்
மாநில வாரியான வசூல் விவரங்கள்
தமிழகத்தில் இத்திரைப்படம் ரூ. 133.21 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
காவிரி நீர் பிரச்சனை காரணமாக சில திரையிடல்கள் ரத்து செய்யப்பட்டபோதிலும், கர்நாடகாவில் ரூ. 29.57 கோடி வசூலித்து இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
மேலும், கேரளாவில் ரூ. 16.74 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 12.59 கோடியும், இந்தியாவின் இதர பகுதிகளில் ரூ. 21.70 கோடியும் வசூலாகியுள்ளது.
ஓடிடி
ஜீ5 தளத்தில் ஓடிடி வெளியீடு
இணையதளங்களில் திரைப்படம் கசிந்தபோதிலும் வணிக ரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.
சென்சார் சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால், ஆரம்பத்தில் பேசப்பட்ட ஓடிடி ஒப்பந்தத்தில் மாற்றம் ஏற்பட்டு கைநழுவியது.
பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜீ5 (Zee5) நிறுவனம் இதன் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
இதன்படி வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
மேலும் மமிதா பைஜூ, நாசர், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.