அடுத்த செய்திக் கட்டுரை

'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
எழுதியவர்
Sindhuja SM
Jul 22, 2023
12:47 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, நடிகர் யோகி பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் வில்லனாக நடித்துள்ளார்.
இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு சிறப்பு காதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், அனிருத் இசையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' ஏற்கவே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இரண்டாவது பாடலான 'ஹுக்கும்' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.
செய்தி இத்துடன் முடிவடைந்தது