Page Loader
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' திரைப்படம் 
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' திரைப்படம்

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' திரைப்படம் 

எழுதியவர் Nivetha P
Sep 02, 2023
01:25 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'ஜெயிலர்'. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம்தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பினை பெற்று இதுவரை ரூ.525 கோடிக்கும் மேல் வசூலினை ஈட்டியுள்ளது. இந்த வெற்றியினை கொண்டாடும் வகையில் அண்மையில் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிக்கு காசோலை மற்றும் ரூ.1.25 கோடி மதிப்புள்ள BMW X7 மாடல் காரினையும், இயக்குனர் நெல்சனுக்கும் அதேபோல் காசோலை மற்றும் ரூ.1.95 கோடி மதிப்புள்ள BMW i7 காரினையும் பரிசாக வழங்கினார். இப்படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், வரும் செப்டம்பர்-7ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஓடிடி தளத்தில் ஜெயிலர் திரைப்படம்