மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் டிக்கெட்கள்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ரிலீஸ், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம். கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார் ரஜினி.
இப்படத்தில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதோடு, கன்னட டாப்ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் என பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்னும் 3 நாட்களில், ஜூலை 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக படத்தயாரிப்பாளர்கள்கள், முதலில் வரும் 1000 பேருக்கு டிக்கெட்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நேற்று மதியம் விற்பனையை துவங்கினர்.
ஆனால், விற்பனை ஆரம்பித்த 15 வினாடிகளிலேயே மொத்த டிக்கெட்டும் மின்னல் வேகத்தில் விற்பனையாகி விட்டது. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் டிக்கெட்கள்
Ivan Trend-ah maathi veppaan! Alapparai-ya kelapitinga 🙌🏼
— Sun Pictures (@sunpictures) July 24, 2023
All the passes have been claimed in just 15 seconds🔥 #JailerAudioLaunch@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial #Jailer pic.twitter.com/Z7UAhSswYD