
'தலைவர் 171': ரஜினியின் கடைசி படம் இதுவா? மிஷ்கினின் பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தை நடித்து முடித்துவிட்டார்.
அதை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடிக்கிறார்.
அதனை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' படம் புகழ் ஞானவேல் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.
அதன் பிறகு, லோகேஷ் கனகராஜ் உடன் கை கோர்க்கிறார் என செய்திகள் வந்தன.
இதனை, சமீபத்தில், இயக்குனர் மிஸ்கின் உறுதி செய்தார். 'லியோ' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் மிஸ்கின் நடித்துள்ளார்.
அது சம்மந்தமான பேட்டி ஒன்றில், லோகேஷின் வளர்ச்சி குறித்து பேசினார் மிஸ்கின்.
அதில், 'தலைவர் 171' படத்திற்காக, ரஜினியே லோகேஷை அழைத்ததாகவும், அது ரஜினியின் கடைசி படமாக இருக்கும் எனவும் அவர் கூறியதை கேட்டு ரஜினியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
மிஷ்கினின் பேட்டி
Rajinikanth called Lokesh Kanagaraj and asked him to direct his last film - Mishkin
— Viber Raja (@Viberraja) May 17, 2023
"Kamal Haasan helped Rajinikanth back then and today Kamal fan Lokesh helping Rajinikanth through difficult times in cinema" pic.twitter.com/8waqWgKsIJ