தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு விரைவில் திருமணம்?
தெலுங்கு நடிகர் பிரபாஸின் திருமணம் பற்றி தற்போது செய்தி வெளியாகியுள்ளது. SIIMA வின் எக்ஸ் பக்கத்தில் வெளியான அறிக்கைப்படி, பிரபாஸின் பெரியம்மா ஷியாமளா தேவி, விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரபாஸின் சாத்தியமான திருமணத் திட்டங்களை பற்றி குறிப்பாக உணர்த்தியதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் பல ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்த்த இந்த திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், மணமகள் பற்றிய விவரங்களை அவர் தற்சமயம் வெளியிடவில்லை. பிரபாஸின் குடும்பம் இந்த தகவலை வெளியே பகிர்ந்துகொள்ள "சரியான" நேரத்திற்காகக் காத்திருப்பதாகவும் ஷியாமளாதெரிவித்துள்ளார். முன்னதாக பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக பேச்சு உலவி வந்தது. எனினும் அவர்கள் இருவரும் அதை மறுத்தனர்.