
ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' படத்துக்கு தடை விதிக்கப்படுமா?
செய்தி முன்னோட்டம்
'ஜெயம்' ரவி நடிப்பில் இந்த மாத துவக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகிலன்'. படம் சரியாக ஓடாத நிலையில், இன்றுமுதல், இந்த திரைப்படத்தை, Zee 5 தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது, 'அகிலன்' திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடுமா, அல்லது அதற்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு காரணமில்லாமல் இல்லை.
இதேபோல, சென்ற மாதம் வெளியான 'மைக்கேல்' திரைப்படமும், வெளியான சிறிது நாட்களிலேயே, OTT ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்படங்கள், திரையரங்கில் வெளியாகி 6 வாரங்களுக்குப் பிறகு தான் OTT-இல் வெளியாவது குறித்து அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
தற்போது அகிலன், நான்கு வாரங்கள் முடியும் முன்னரே OTT அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இன்று முதல் Zee 5-இல் அகிலன்
#Agilan Streaming Now On #ZEE5 pic.twitter.com/2a1J5GvpuW
— CINEMATENT 🍿🎬 (@CINEMATENT) March 31, 2023