சர்வதேச பெண்கள் தினம்: பெண்களை கொண்டாடிய கோலிவுட் சினிமா
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து படங்கள் வெளிவருவது அபூர்வம்.
அப்படியே வந்தாலும், சொதப்பலான திரைக்கதையிலும், அழுத்தம் இல்லாத கதையிலும் அவை ரசிகர்களை ஈர்க்க தவறும்.
எனினும், தடைகளை மீறி ஒருசில இயக்குனர்கள் பெண்களை கொண்டாடும் அல்லது பெண்களின் பார்வையில் சமூகத்தை பற்றிய படங்களை எடுக்க தவறுவதில்லை.
இத்தகைய படங்கள் வசூல் ரீதியாக சாதிக்க தவறினாலும், விமர்சன ரீதியாக கல்ட் கிளாசிக் படமாக மாறும்.
இந்த 2025 சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாட தயாராகும் வேளையில், பெண்ணியத்தை போற்றிய, பெண்களின் பார்வையில் உலகை காட்டிய ஒரு சில தமிழ் படங்களின் தொகுப்பை பார்க்கலாம்.
#1
திரைப்பட பட்டியல் #1
காதலிக்க நேரமில்லை: இக்கால Gen Z பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு படம். ஆண்கள் துணையின்றி தன்னால் வாழ முடியும் என வாழும் ஒரு சிங்கள் மதர். தன்னுடைய கேரியரை விட்டுக்கொடுக்காத சுய சிந்தனை கொண்ட பெண் பற்றிய கதை.
பொன்னியின் செல்வன்: ஒரு சாம்ராஜயத்தை கட்டி ஆளும் ஒரு இளவரசி, அழகுடனும், அறிவுடனும், ராஜதந்திரத்துடனும் நாட்டை பிளவுபடுத்த துடிக்கும் ராணி, சமுத்திரத்தை கடக்க ஆண்களுக்கு கொஞ்சமும் சளைக்காத தினவு கொண்ட சமுத்திர குமாரி, இவர்களோடு காட்டுக்கே ராணியாக இருக்கும் ஒரு பெண் என நான்கு பெண்களை பற்றிய கதை இந்த பொன்னியின் செல்வன். படத்தின் தலைப்பு ஒரு இளவரசரை பற்றியதாக இருப்பினும், படத்தை நகர்த்துவது என்னமோ இந்த நான்கு பெண்கள் தான்.
#2
திரைப்பட பட்டியல் #2
சாணி காயிதம்: தன்னுடைய குடும்பத்தை சீர்குலைத்த மிருகங்களை வேட்டையாடும் ஒரு அவளை பெண்ணின் கதை. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் உருவான படம், விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது.
ஸ்நேகிதியே: பெண்களுக்கு இடையே இருக்கும் நட்பை பற்றிய ஒரு கிரைம் திரைப்படம். சுவாரசியமாக இந்த படத்தில் நாயகனே இல்லை. படம் முழுக்க பெண்கள் மட்டுமே. ப்ரியதர்ஷனின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் தபு, ஜோதிகா என பலர் நடித்துள்ளனர்.
காற்றின் மொழி: திருமண ஆகி ஹவுஸ் வைஃப்பாக இருக்கும் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரெச்சனைகளும், அவளே பின்னர் வேலைக்கு செல்லும் போது வேலை- குடும்பம் என கவனிக்க போராடும் விதத்தையும் எடுத்து காட்டுகிறது.
#3
திரைப்பட பட்டியல் #3
தி கிரேட் இந்தியன் கிச்சன்: இதே பெயரில் மலையாளத்தில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக் இந்த திரைப்படம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த படத்தில் கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண், திருமணம் ஆனதும் எப்படி அடுப்படிக்குள் அடிமைபடுத்துகிறது இந்த சமூகம் என விவரிக்கிறது இந்த படம்.
அருவி: அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அருவி. இந்த திரைப்படத்தில் நடிகை அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருப்பார். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண், இந்த சமூகத்தின் அவலத்தில் சிக்கி தன்னையே இழக்க நேரிடும் தருணமும், அதை எதிர்த்து அவள் கேள்வி கேட்பதையும் கூறுகிறது.