NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏ.ஆர்.ரகுமானை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 06, 2024
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

    அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

    1966ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஏஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார் ஆகும். அவர் தனது 23வது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

    அவரது தந்தை மலையாள திரையுலகில் இசையமைப்பராக இருந்தவர ஆவார். ரகுமானின் 9-வது வயதில் அவர் தந்தை மரணமடைந்தார்.

    தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு பல வருடங்களாக தற்கொலை எண்ணங்களுடன் தான் போராடியதாக ஏ.ஆர்.ரகுமான் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

    ட்ஜ்வ்,

    முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் 

    அதற்கிடையில், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆகியோருக்கு உதவியாளராகவும் ஏஆர் ரகுமான் இருந்திருக்கிறார்.

    அதன் பின், 1992-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார்.

    அதன்பின் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், சீனம் என பல மொழிகளில் இசையமைத்து உலகளவில் புகழ் பெற்றார்.

    'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் மூலம் சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் விருத்தை வென்றார்.

    மொத்தமாக, 2 ஆஸ்கார் விருதுகள், 6 தேசிய விருதுகள், 11 IIFA விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், பாப்தா, கிராமி விருது என அவர் பெற்ற விருதுகளின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    ஏஆர் ரஹ்மான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கோலிவுட்

    நயன்தாராவின் 75வது படத்தின் பெயர் 'அன்னபூரணி' நயன்தாரா
    ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய 'லெஜெண்ட்' சரவணன்; வைரலாகும் வீடியோ  சினிமா
    நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது  விக்ரம்
    'விடாமுயற்சி' படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் 'ஹம்மர் H2' மாடல் காரில் என்ன ஸ்பெஷல்? எஸ்யூவி

    ஏஆர் ரஹ்மான்

    'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில் இசையமைப்பாளர்கள்
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்! மகாராஷ்டிரா
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman இசையமைப்பாளர்கள்
    பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற பாடல், இசை திருட்டில் உருவானதா? கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025