LOADING...
கூமாபட்டி தங்கபாண்டிக்கு பேருந்து பயணத்தில் எலும்பு முறிவு: மருத்துவமனையில் அனுமதி
கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு

கூமாபட்டி தங்கபாண்டிக்கு பேருந்து பயணத்தில் எலும்பு முறிவு: மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2025
02:08 pm

செய்தி முன்னோட்டம்

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த கூமாபட்டி தங்கபாண்டி, தனியார் டிவி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும்போது, பேருந்தில் ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தை, தனது இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் "ஏங்க கூமாபட்டிக்கு வாங்க" என்று கூறி பிரபலப்படுத்தியவர் தங்கபாண்டி. தற்போது, ஒரு தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வருகிறார்.

விபத்து

விபத்து விவரங்கள்

சம்பவத்தன்று, படப்பிடிப்பை முடித்துக்கொண்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார் தங்கபாண்டி. பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, இயற்கை உபாதைக்காகக் கீழே இறங்க முயன்றிருக்கிறார். எதிர்பாராதவிதமாக, பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், தங்கபாண்டி நிலை தடுமாறி பேருந்தின் கதவில் மோதினார். இந்த விபத்தில் அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்புமுறிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வரும் தங்கபாண்டி இந்தச் சம்பவம் குறித்துக் கூறுகையில்,"இறங்க முயன்றபோது டிரைவர் திடீரென பிரேக் போட்டார். வலியால் கதவைத் திறக்கச் சொல்லியும், அது 'லாக்' ஆகிவிட்டது. வலி தாங்க முடியாமல் துடித்தபோது, இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து என்னை வெளியேற்றினார்கள்," என்றார்.