
இந்தியன்-2 வில் ஏ.ஆர்.ரஹ்மான்: நேற்று இரவு இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட மாஸ் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
'இந்தியன்-2' திரைப்படம் இன்று அதிகாலை வெளியாகி உள்ளது.
படத்தயாரிப்பு கோரிக்கைக்கு இணங்கி படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், நேற்று இரவு ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார்.
அதன்படி, 'இந்தியன் தாத்தா' சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு இந்தியன் 1 படத்தின் இசைக்கோர்வை எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கு AR ரஹ்மானும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து, X பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இதற்கிடையே இந்தியன்-2 திரைப்படத்தின் இறுதியில், சுமார் 2.30 நிமிடங்கள் ஓடும் "இந்தியன்-3" படத்திற்கான ட்ரெய்லர்-உம் வெளியாகும் முன்னமே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல்காட்சி பார்த்த ரசிகர்களின் விமர்சனங்களுக்காக தற்போது பலரும் காத்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியன்-2 வில் ஏ.ஆர்.ரஹ்மான்
For all those nostalgics out there, Excited to announce that some of Indian’s themes for Senapathy will return in its sequel - #Indian2 Thanks to @arrahman and @anirudhofficial #Indian2morrow pic.twitter.com/AvG6bjEcLi
— Shankar Shanmugham (@shankarshanmugh) July 11, 2024