Page Loader
ஆஸ்கார்  விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 10 இந்தியப் படங்கள்
ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வாகி இருக்க வேண்டிய 10 இந்தியப் படங்கள்

ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 10 இந்தியப் படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 13, 2023
05:30 am

செய்தி முன்னோட்டம்

உலகின் உயரிய திரைப்பட விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதிற்கு தகுதி பெறும் படங்களின் பட்டியல், சமீபத்தில் வெளியானது. அதில் கிட்டத்தட்ட 301 படங்கள், உலகம் முழுவதிலிருந்தும் தேர்வாகின. வெளியிடப்பட்ட படங்களின் தேர்வு பட்டியல் (eligibility list) படி, இந்தியாவிலிருந்து 10 திரைப்படங்கள் தேர்வாகியது. அவை: காஷ்மீரில் நடந்த கலவரங்கள் தொடர்பாக, விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இயக்குனர் ரா.பார்த்திபன் இயக்கி நடித்த தமிழ் திரைப்படமான 'இரவின் நிழல்'. சென்ற ஆண்டு வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிய, கன்னட இயக்குனர், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம். உண்மை சம்பவங்களின் அடிப்படையாக, திரைப்பட நடிகர் மாதவன், முதன் முறையாக இயக்கி நடித்த, 'ராக்கெட்ரி' திரைப்படம்.

ஆஸ்கார்

ஆஸ்கார் விருது போட்டியில் இந்திய படங்கள்

ஹிந்தி திரைப்பட நடிகை ஆலியா பட் நடித்த, 'கங்குபாய் கத்தியவாடி' படமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதோடு, ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் ஹிட்டான, RRR திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்றும், குஜராத்தி மொழி திரைப்படமான, Chhello Show -உம், 'மீ வசந்த்ராவ்', 'தி நெக்ஸ்ட் மார்னிங்', மற்றும் கன்னட மொழி படமான விக்ராந்த் ராணா-வும் தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பரிந்துரைப்பு பட்டியலில் இருந்து மூன்று படங்கள் மட்டுமே இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இன்று (மார்ச் 13) நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல், கோல்டன் குளோப்ஸ் விருதை பெற்றுள்ளது.