Page Loader
கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர்; ஆப்பிரிக்கா ஷூட்டிங்-ஐ நிறைவு செய்த படக்குழு
வெற்றிகரமாக ஆப்பிரிக்கா ஷெட்யூலை முடித்த இந்தியன் 2

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர்; ஆப்பிரிக்கா ஷூட்டிங்-ஐ நிறைவு செய்த படக்குழு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 18, 2023
04:13 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் ஆப்பிரிக்கா ஷெட்யூல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படத்தோடு பகிர்ந்துகொண்டார்.. அதில், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்ததோடு, மே மாதத்தில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சந்திக்கலாம் எனவும் பதிவிட்டிருந்தார். அதுவரை தெலுங்கில் ராம்சரணை இயக்கும் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்குவதில் கவனம் செலுத்த போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'இந்தியன் 2' திரைப்படத்தில், கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல்ப்ரீத் சிங், பிரியாபவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் தான் ஏற்ற சேனாபதி கதாபாத்திரைத்தை தான் தற்போது கமல் ஏற்றுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆப்பிரிக்கா ஷெட்யூலை முடித்த இந்தியன் 2