அடுத்த செய்திக் கட்டுரை

"சேனாதிபதியின் சேனை": வைரலாகும் கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 12, 2023
03:48 pm
செய்தி முன்னோட்டம்
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
தற்போது படக்குழு ஆப்பிரிக்கா நாட்டில் உள்ளது என்று அறிந்திருப்பீர்கள். அங்கே முக்கியமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னரும், படக்குழு, டோக்கியோ நகரத்தில் சில காட்சிகளை படமெடுத்துள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சேனாதிபதியின் சேனா' என குறிப்பிட்டு, தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் மற்றும் சிலருடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
கமல், இந்தியன் 2 படத்தில், 'சேனாதிபதி' என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள உதவுபவர்களுக்கு நன்றி கூறுவது போல உள்ளது அந்த பதிவு.