இந்தியன் தாத்தாவின் புகைப்படத்தை பகிர்ந்து, கமலுக்கு இயக்குனர் சங்கர் பிறந்தநாள் வாழ்த்து
தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வரும் உலக நாயகன் கமலஹாசனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் இயக்குனரான சங்கர், அப்படத்தில் கமல் வேட்டி, சட்டையில் இருக்கும் பிரத்தியேக புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். "நம்முடைய உலக நாயகன் கமலஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் மீண்டும் பணியாற்றி சேனாபதியை திரும்ப அழைத்து வரும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை." "எங்களை மகிழ்வித்து, மேலும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என அவர் பதிவிட்டு இருந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு, சங்கர், கமலஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.