
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை மீது போலீசில் புகார்; நயன்-விக்கியையும் விட்டுவைக்கவில்லை
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவர் திருச்சி அருகே இருக்கும் லால்குடியில், அவரது உறவினரின் சொத்தை, அவருக்கே தெரியாமல் அபரித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரை, சிவக்கொழுந்துவின் உறவினர்கள், லால்குடி டிஎஸ்பி அலுவலகத்தில், ஆதாரங்களுடன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த புகாரில், விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா, விக்னேஷ் சிவன், நயன்தாரா, ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம்.
விக்னேஷ் சிவனின் தாய் மீனா குமாரியும் சமீபத்தில் தான் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் சிவனின் தந்தை மீது புகார்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது கிரிமினல் புகார் https://t.co/wPWtSpQKp7#vigneshshivan #nayanthara #trichy #case pic.twitter.com/Px1cZcX6SD
— Reflect News Tamil (@reflectnewstn) July 7, 2023