Page Loader
முதல்முறையாக, தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை இலியானா
காதலர் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை இலியானா

முதல்முறையாக, தனது காதலர் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை இலியானா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2023
05:06 pm

செய்தி முன்னோட்டம்

'கேடி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. கோவாவை பூர்விகமாக கொண்ட இவர், தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தார். பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த இலியானா, அவ்வப்போது ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்தார். தமிழில், 'நண்பன்' திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி தந்தவர், பின்னர் மீண்டும் ஏனோ தமிழ் திரையுலகம் பக்கம் வரவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞரான அண்ட்ரூ என்பவரை காதலித்தார். நீண்ட நாட்களாக தொடர்ந்த அவர்கள் காதல், ஏனோ முறிந்தது. அந்த மனஉளைச்சலால், இலியானா திரையுலகை விட்டு விலகி இருந்தார். தொடர்ந்து அவர் உடல் எடை கூடியதாகவும் செய்திகள் வெளியாகியது.

card 2

கத்ரீனா கைஃப் அண்ணனை காதலித்தார் இலியானா?

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், தான் தாயானதாக சூசகமாக அறிவித்தார் இலியானா. அவ்வப்போது, தன்னுடைய புகைப்படத்தை மட்டும் பதிவிட்ட இலியானா, அவரின் திருமணம் குறித்தோ, காதலர் குறித்தோ மௌனம் காத்துவந்தார். இந்நிலையில், அவர் திருமணத்திற்கு முன்பே தாயாகி விட்டார் என செய்திகள் வெளிவந்தன. அதோடு, அவரின் காதலர், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரராக இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது. அதற்கு காரணம், ஒரு கோடை விடுமுறையை, கத்ரினாவின் குடும்பத்தாரோடு செலவிட்டார் இலியானா. இந்நிலையில், தன்னுடைய காதலர் புகைப்படத்தை, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் இலியானா. எனினும், அவர் யார்? அவரின் பெயர் என்ன? போன்ற விவரங்கள் ஏதும் குறிப்பிடாமல், தன்னுடைய தாய்மையை கொண்டாடும் வகையில் டேட்டிங் சென்றதாக பதிவு மட்டும் இட்டுள்ளார்.

Instagram அஞ்சல்

வைரலாகும் இலியானாவின் பதிவு