Page Loader
'IC 814' சர்ச்சை: Netflix இந்தியா உள்ளடக்கத் தலைவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்; என்ன காரணம்?
Netflix கன்டென்ட் ஹெட் விளக்கமளிக்க சம்மன் செய்யப்பட்டுள்ளார்

'IC 814' சர்ச்சை: Netflix இந்தியா உள்ளடக்கத் தலைவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2024
09:26 am

செய்தி முன்னோட்டம்

நெட்ஃபிளிக்ஸ்-இன் தொடரான ​​'IC 814: The Kandahar Hijack' இல் கடத்தல்காரர்களை சித்தரிப்பது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் Netflix இந்தியாவின் உள்ளடக்கத் தலைவர் மோனிகா ஷெர்கில்-ஐ, இன்று மத்தியஅரசு விளக்கமளிக்க சம்மன் செய்துள்ளது. இந்த வெப் தொடரின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் குறித்து விளக்கமளிக்க ஷெர்கிலை செவ்வாய்கிழமை நேரில் ஆஜராகுமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் விஜய் வர்மா, நசிருதீன் ஷா, பங்கஜ் கபூர், மனோஜ் பஹ்வா, அரவிந்த் சாமி, அனுபம் திரிபாதி, தியா மிர்சா, பத்ரலேகா, அம்ரிதா புரி, திபியேந்து பட்டாச்சார்யா மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கடத்தல்

நிஜ கடத்தலை பிரதிபலிக்கிறதா வெப் தொடர்?

1999 ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐசி 814 ஐ, பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-முஜாஹிதீன் கடத்தலை நாடகமாக்கும் 'ஐசி 814', தொடரில் இரண்டு கடத்தல்காரர்களின் பெயர்கள் குறிப்பிட்ட மதத்தின் பெயர்களால் மட்டுமே குறிப்பிடப்பட்டதால் சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கான காரணம் குறித்து கேட்டதற்கு, "இந்த தேசத்தின் மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். எதையாவது தவறாக சித்தரிக்கும் முன் நீங்கள் சிந்திக்க வேண்டும். அரசு அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது" எனக்கூறப்பட்டது.