ஹ்ரித்திக் ரோஷன்- தீபிகா நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியானது
பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள 'ஃபைட்டர்' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து ஹிந்திக்கு ரீமேக் செய்யப்பட்ட 'விக்ரம் வேதா' படத்துக்குப் பிறகு, நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் இதுதான். இப்படத்தை இயக்கியுள்ளது சித்தார்த் ஆனந்த். இவர் ஏற்கனவே 'வார்', 'பதான்' போன்ற தேசப்பற்று-ராணுவம் சார்ந்த படங்களை இயக்கியவர். இந்த'ஃபைட்டர்' திரைப்படத்தில், தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைக்கிறார். ரூ.250 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்தாண்டு குடியரசு தினத்தை ஒட்டி, ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகிறது.