Loading...
ஜெயிலர் 2-வில் ஹிருத்திக் ரோஷன் சர்ப்ரைஸ் எண்ட்ரி! 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் கூட்டணி
ஜெயிலர் 2-வில் ஹிருத்திக் ரோஷன் சர்ப்ரைஸ் எண்ட்ரி

ஜெயிலர் 2-வில் ஹிருத்திக் ரோஷன் சர்ப்ரைஸ் எண்ட்ரி! 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் கூட்டணி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
06:43 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய ஆச்சரியமாக பாலிவுட் முன்னணி நட்சத்திரம் ஹிருத்திக் ரோஷனின் சிறப்புத் தோற்றம் அமைந்துள்ளது. ரஜினிகாந்துடன் அவர் திரையில் தோன்றிய மாஸ் காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களைப் பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த சர்ப்ரைஸ் எண்ட்ரி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கூட்டணி

40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி - ஹிருத்திக் அபூர்வ கூட்டணி

ஹிருத்திக் ரோஷன் சிறுவனாக இருந்தபோது, 1986 ஆம் ஆண்டு வெளியான பகவான் தாதா என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார்.

அதில் ரஜினியின் வளர்ப்பு மகனாக ஹிருத்திக் நடித்திருந்தார்.

தற்போது சுமார் 40 ஆண்டுகள் கழித்து, ஒரு முன்னணி பாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 மூலம் திரையைப் பகிர்ந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

சல்மான்கான் ஸ்டைல்

சல்மான் கான் ஸ்டைல் மற்றும் மாஸ் சன்கிளாஸ் ஸ்வாக்

படத்தில் ஹிருத்திக் ரோஷனின் ஆரா மற்றும் மேனரிசங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

குறிப்பாக தனது சன்கிளாஸைக் கழற்றி சட்டையின் பின்பக்க காலரில் மாட்டும் காட்சி, தபாங் திரைப்படத்தில் சல்மான் கான் செய்த புகழ்பெற்ற சுல்பூல் பாண்டே ஸ்டைலை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது.

மேலும் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற சன்கிளாஸ் சுழற்றும் ஸ்டைலையும் ஹிருத்திக் அவருக்கு முன்பாகவே செய்து காட்டியது திரையரங்குகளில் விசில் பறக்க வைக்கும் மாஸ் தருணமாக அமைந்தது.

ADVERTISEMENT

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளத்துடன் மாபெரும் வரவேற்பு

ஜெயிலர் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் மீண்டும் மிரட்டியுள்ளார்.

இவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும், சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஹிருத்திக் ரோஷனும் இணைந்துள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ஹிருத்திக் ரோஷனைத் தமிழில் களம் இறக்கியது நெல்சனின் மாஸ்டர் பிளான் எனத் திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT