LOADING...
முதல் ஆஸ்கார் விருதை பெற்றார் டாம் க்ரூஸ்; ஆனால் படத்தில் நடித்ததற்காக அல்ல.. 
இது அவருக்கு அகாடமி வழங்கும் முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது

முதல் ஆஸ்கார் விருதை பெற்றார் டாம் க்ரூஸ்; ஆனால் படத்தில் நடித்ததற்காக அல்ல.. 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2025
12:18 pm

செய்தி முன்னோட்டம்

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) வழங்கும் கௌரவ ஆஸ்கார் (Honorary Oscars) விருதுகளை அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான கௌரவ ஆஸ்கார் விருதுகள் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், வின் தாமஸ், டெபி ஆலன் மற்றும் டாலி பார்ட்டன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன. டாம் குரூஸ் இதுவரை நடிப்பிற்கான ஆஸ்கார் விருதை வெல்லாத நிலையில், இது அவருக்கு அகாடமி வழங்கும் முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படக் கலை மற்றும் அறிவியல் துறையில் வாழ்நாள் சாதனை, விதிவிலக்கான பங்களிப்புகள் அல்லது அகாடமிக்கு ஆற்றிய சிறந்த சேவை ஆகியவற்றைக் கௌரவிக்கும் வகையில் இந்த கௌரவ விருது வழங்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கியத்துவம்

கௌரவ ஆஸ்கார் முக்கியத்துவம் 

டாம் குரூஸ் இதுவரை நடிப்பிற்கான ஆஸ்கார் விருதை வெல்லாத நிலையில், இது அவருக்கு அகாடமி வழங்கும் முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படக் கலை மற்றும் அறிவியல் துறையில் வாழ்நாள் சாதனை, விதிவிலக்கான பங்களிப்புகள் அல்லது அகாடமிக்கு ஆற்றிய சிறந்த சேவை ஆகியவற்றைக் கௌரவிக்கும் வகையில் இந்த கௌரவ விருது வழங்கப்படுகிறது. "இந்த ஆண்டு கவர்னர்ஸ் விருதுகள், திரைப்படத் துறையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நான்கு புகழ்பெற்ற ஆளுமைகளைக் கொண்டாடும்" என்று அகாடமி தலைவர் ஜேனட் யாங் தெரிவித்துள்ளார்.