Page Loader
பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு
எம்.என்.நம்பியாரின் வழக்கில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2023
06:41 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த, பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியாரின் சொத்துகளான, புகைப்படங்கள், பூஜை பொருட்கள் மற்றும் விருதுகள் ஆகியவற்றை, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்ததை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், வழக்கறிஞர் ஆணையரை நியமித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. எம்.என்.நம்பியாருக்கு, மூன்று பிள்ளைகள் - இரண்டு மகன்கள் (சுகுமாரன், மோகன்) மற்றும் ஒரு மகள்(ஸ்நேகலதா). இதில், நம்பியாரின் மூத்த மகன் காலமான பிறகு, அவரின் மகனான சித்தார்த் சுகுமார் தான் தற்போது இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

எம்.என்.நம்பியார்

வழக்கின் விவரங்கள்

"எனது தாத்தா நம்பியாரின் புகைப்படங்கள், விருதுகள், சபரிமலை ஐய்யப்பனின் ஓவியங்கள், பூஜைபொருட்கள் உள்பட அவர் பயன்படுத்திய பொருட்கள் எனது அத்தையின் வசம் உள்ளது. நம்பியாருடன் ஒரே குடும்பமாக இருந்தபோது, அந்த பொருட்களை அனைவரும் வைத்திருந்தோம். அந்த பொருட்களை எனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட எனது அத்தை சினேகலதா, நான் தனியாக வீடு வாங்கி குடியேறிய பிறகு, தற்போது தர மறுக்கிறார். எனவே அந்த பொருட்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என வழக்கு தொடுத்திருந்தார் சித்தார்த். இந்த வழக்கை விசாரித்த தனிநபர் நீதிமன்றம், ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. தற்போது, நம்பியாரின் மகள், ஸ்நேகலதா, அந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார். ஆனால், உயர்நீதிமன்றமோ,ஸ்நேகாலதாவின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.