Page Loader
தமிழ் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகைகள் 
சிட்டிசன் படத்திற்கு பிறகு, படவுலகை விட்டு ஒதுங்கி விட்டார் பாடகி வசுந்தரா தாஸ்

தமிழ் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகைகள் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 15, 2023
09:30 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டில் பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று, 'அடுத்த கனவுகன்னியாக ஒரு பெரிய ரவுண்டு வருவார்' என மிகவும் எதிர்பார்த்து, ஒரே படத்தோடு காணாமல் போன நடிகைகள் பற்றிய அதிகம். எந்த ஒரு புதுமுக நடிகையும், திரையுலகில் கோலோச்ச வேண்டும், அடுத்த சிம்ரன், அடுத்த திரிஷா ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு தான், முதல் படத்தில் நடிக்க வருகிறார். ஆனால் எந்த காரணத்தினாலோ அவர் வந்த வேகத்திலேயே போய் விடுகிறார். அப்படி எதிர்பார்ப்பை எகிற செய்து, மறைந்து போன நடிகைகளின் பட்டியல் இதோ: வசுந்தரா தாஸ்: ஹே ராம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார் பாடகி வசுந்தரா தாஸ். அதன் பின்னர், சிட்டிசன் திரைப்படத்தில், அஜித்துடன் ஜோடியாக நடித்தார். இவரின் வசீகர குரலும் இவரின் பிளஸ்.

card 2

தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆன பிரபஞ்ச அழகி 

லாரா தத்தா: பிரபஞ்ச அழகியான லாரா தத்தா, அர்ஜூனுடன் அரசாட்சி என்ற படத்தின் மூலம்தான், சினிமா உலகில் என்ட்ரி ஆனார். அதோடு தமிழ் திரையுலகம் பக்கம் வரவே இல்லை. பிரியா கில்: இவரும் அஜித் படத்தின் நாயகி தான். 'ரெட்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தமிழ் படங்களில் பெரிதாக வைப்பதும் கிடைக்காத காரணத்தால், திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். மானு: காதல் மன்னன் திரைப்படத்தில், பாந்தமான பெண்ணாக நடித்தவர் மானு. இவர் நாட்டியம் பயின்றவர். அந்த ஒரு படத்தோடு, சினிமாவிற்கு டாட்டா சொல்லிவிட்டார். மோனிகா: இவர் மின்சார கண்ணா படத்தில் அறிமுகமானவர். பாலிவுட் நடிகையான இவர், அந்த படத்திற்கு பின்னர், ஏனோ தமிழ் பக்கம் வரவில்லை.