Page Loader
'இனிமேல்' பாடல் வெளியானது; ரொமான்ஸில் கலக்கியிருக்கும் 'ஹீரோ' லோகேஷ் கனகராஜ்
நவீன நகர்ப்புற காதலில் உருவாகும் அனைத்து நிலைகளையும் சித்தரிக்கும் பாடலாக உள்ளது இந்த 'இனிமேல்'

'இனிமேல்' பாடல் வெளியானது; ரொமான்ஸில் கலக்கியிருக்கும் 'ஹீரோ' லோகேஷ் கனகராஜ்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 25, 2024
05:48 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, கமல்ஹாசன் எழுத்தில், ஸ்ருதி ஹாசனின் இசை மற்றும் குரலில், ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியாகியுள்ளது. நவீன நகர்ப்புற காதலில் உருவாகும் அனைத்து நிலைகளையும் சித்தரிக்கும் பாடலாக உள்ளது இந்த 'இனிமேல்'. தமிழ் சினிமாவில் பல ஆக்ஷன் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இந்த பாடலில் ரொமான்ஸில் பிரமாதப்படுத்தியுள்ளார் என நெட்டிஸின்கள் தெரிவித்து வருகின்றனர். இப்பாடலின் டீசரின் போதே லோகேஷின் ரொமான்ஸ் காட்சிகளை கலாய்த்த இணையவாசிகள், முழு பாடலில், லோகேஷின் சிறப்பான நடிப்பை பார்த்து, ரொமான்ஸில் கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டதாக கூறி வருகிறார்கள். இந்த பாடல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

embed

'இனிமேல்' பாடல் வெளியானது

#Inimel love is live, immerse yourself in its heartfelt melody 💖🎵 Join us in the musical journey now!https://t.co/CH8dBXJxw3#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey #Inimelnow@ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan #Mahendran @RKFI @turmericmediaTM @IamDwarkesh... pic.twitter.com/mExc9oC18g— Raaj Kamal Films International (@RKFI) March 25, 2024