Page Loader
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman

எழுதியவர் Venkatalakshmi V
May 02, 2023
05:09 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான், புனேவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். தனது இசையமைப்பில் வெளியான பிரபலமான பாடல்களை தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தார். ரசிகர்களும், அவரின் இசை வெள்ளத்தில் மூழ்கிகிடந்த நேரம், யாரும் எதிர்பாரா வண்ணம், மகாராஷ்டிரா காவல்துறை அதிகாரி ஒருவர், திடீரென்று மேடையில் ஏறி, இரவு மணி 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதென்றும், மகாராஷ்டிரா மாநில விதிகள்படி, 10 மணிக்கு மேல் போது நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்றும் ரஹ்மானிடம் கூறினார். அதை பெருந்தன்மையை ஏற்று கொண்ட ரஹ்மான், கூட்டத்தினரிடம், "நீங்கள் அளித்த அன்பின் காரணமாக நான் சற்று எல்லை மீறி, நேரத்தை கவனிக்காமல் விடுவேன். இதனுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொள்வோம்" என அறிவித்தார்.

card 2

ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு 

மகாராஷ்டிரா போலீஸின் கடமை உணர்ச்சியை ஒரு சாரார் புகழ்ந்தாலும், ஒரு சிலர், "அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி இருக்க வேண்டும், மாறாக நேராக மேடை ஏறி, ரஹ்மானிடம் கூறியது அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை" என்றும், "இது ஆஸ்கார் நாயகனுக்கு விழைக்கப்பட்ட அநீதி" என்றும் விமர்சித்து வருகின்றனர். அதோடு, DisRespectOfARRahman என்கிற ஹாஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. லைகா நிறுவனம் முதற்கொண்டு பல பிரபலங்களும் பொதுமக்களும் இதை பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

லைகாவின் ஆதரவு 

ட்விட்டர் அஞ்சல்

இசைநிகழ்ச்சியில் இருந்தவர் கருத்து

ட்விட்டர் அஞ்சல்

எழுத்தாளர் அருந்ததி ராயின் பதிவு