அடுத்த செய்திக் கட்டுரை

ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!
எழுதியவர்
Siranjeevi
May 01, 2023
05:23 pm
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராஜ்பகதூர் திறந்தவெளி அரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
இரவு 10 மணியை கடந்தும், ஏ.ஆர். ரஹ்மான் கடைசி பாடலை பாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென, காவல்துறை அதிகாரி ஒருவர் மேடை ஏறி இசை நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார்.
இதனால் கீழே இருந்த ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர்.
பின்னர் காவல்துறை அதிகாரியின் செயலுக்கு இணையத்தில் வீடியோவை வெளியிட்டு கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.