'சீயான்' விக்ரம் பிறந்தநாள் இன்று: அவரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள்
'சீயான்' விக்ரம் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விக்ரமின் பிறந்தநாள் இன்று. 'The man with no haters' என கூறப்படுபவர். எந்தவித பாகுபாடுமின்றி, அனைவரிடமும் சகஜமாக பழக்கூடிய நபர் விக்ரம். இப்படி சினிமா வட்டாரத்தில் அனைவராலும் விரும்பப்படுவது அபூர்வமே. அதே சமயம், அவரின் திரைப்படங்களும் பலராலும் விரும்பும் வகையில் இருக்கும். படம் ஓடவில்லை என்றாலும், அந்த படத்தை விக்ரமிற்காக ஒரு முறை பார்க்கலாம் என்பது போல, நடிப்பில் கலக்கி இருப்பார். அவரின் அசத்தல் நடிப்பில் வெளியான சில பிரமிப்பூட்டும் திரைப்படங்கள் இதோ: சேது: விக்ரமின் கம்பேக் திரைப்படம் இது. ஆரம்பநாட்களில் பெரிதாக வெற்றி காணமுடியாமல் போனபோது, பாலாவின் அறிமுக படமாகவும், விக்ரமின் திறமையை வெளிக்கொணரும் படமாகவும் இந்த படம் அமைந்தது.
பாடி பில்டராக விக்ரம் தன்னை உருமாற்றி நடித்த ஐ திரைப்படம்
காசி: கண்பார்வை அற்றவராகவே வாழ்ந்திருப்பார் விக்ரம். இதற்காக, தன்னுடைய கண்களை மிகவும் வருத்திக்கொண்டதாகவும், அதனால் சில எதிர்மறை விளைவுகளையும், உடல்ரீதியாக சந்திக்க நேர்ந்ததாகவும் கூறுவார்கள். ஐ: மூன்று விதமான தோற்றத்தில் நடித்திருப்பார் விக்ரம். அந்த மூன்று வகை பாத்திரங்களுக்கும், தன்னுடைய உடலை வருத்தி நடித்திருப்பார் விக்ரம். ஷங்கரின் பிரமாண்ட படைப்பில் உருவான இந்த திரைப்படம், விக்ரமின் நடிப்பிற்காகவே ஹிட் ஆனது எனலாம். சாமி: நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் அதே நேரத்தில், கமெர்ஷியல் படங்களுக்கும் விக்ரம் முக்கியத்துவம் தந்தார். ஹரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், விக்ரம் சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படம். இருமுகன்: திருநர் கதாபாத்திரம் மற்றும் ரா ஏஜென்ட் கதாபாத்திரம் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விக்ரம்