பர்த்டே ஸ்பெஷல்: யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை அஞ்சலியின் டாப் 5 படங்கள்
'பாலதிரிபுர சுந்தரி'யாக ஆந்திராவில் பிறந்த நடிகை அஞ்சலி, இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிகையில்லதாக எதார்த்தமான நடிப்பினால் முதல் படத்திலிருந்தே நம்மை ஆச்சரியப்படுத்தியவர் இவர். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். நடிப்பு மட்டுமின்றி, துள்ளலான நடனமும் அஞ்சலியின் பலம். அப்படி இவரின் யதார்த்த நடிப்பில் வெளியான டாப் 5 படங்களின் பட்டியல் இதோ: கற்றது தமிழ்: இயக்குனர் ராமின் அறிமுக படம்தான், இவருக்கும் தமிழ் திரையுலகில் அறிமுக படம். ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பல விருதுகளை பெற்றார். அங்காடி தெரு: தேசிய விருது வென்ற இந்த படம், சென்னையின் ரங்கநாதன் தெரு வாழ்க்கையை பிரதிபலித்தது. இதற்காக ஒரு பெரிய கடையில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாகவும் கூறப்பட்டது.
மாநில விருது வென்ற அஞ்சலி
எங்கேயும் எப்போதும்: மென்மையான இந்த கதையில், துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அஞ்சலிக்கு தமிழ்நாடு அரசு சார்பாக சிறந்த நடிகைக்கான மாநில விருது கொடுக்கப்பட்டது. இறைவி: கார்த்திக்கு சுப்புராஜின் அற்புதமான படைப்பு இந்த திரைப்படம். அதில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஒருசில காட்சிகளில் மட்டும் தோன்றினாலும், படத்தில் தனது முத்திரையை பதித்திருந்தார் அஞ்சலி. பேரன்பு: மீண்டும் இயக்குனர் ராம் உடன் ஒரு அழுத்தமான கதாபாத்திரம். நடிகர் மம்மூட்டியுடன் ஜோடியாக நடித்திருப்பார் அஞ்சலி. கலகலப்பு: தன்னால் காமெடி கதாபாத்திரத்திலும் கலக்க முடியும் என நிரூபித்த திரைப்படம் இது. விமல், சிவா, ஓவியா என ஒரு நடிகர் பட்டாளத்தையே இயக்கி இருப்பார் சுந்தர்.சி.