Page Loader
இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 'காந்தாரி'
காந்தாரி படத்தின் பஃர்ஸ்ட் லுக்

இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 'காந்தாரி'

எழுதியவர் Saranya Shankar
Dec 25, 2022
11:22 pm

செய்தி முன்னோட்டம்

திரையுலகில் தனுக்கென ஒரு இடத்தை பெற்றவர் ஹன்சிகா. இவர் தற்போது நடித்து வரவிருக்கும் படம் காந்தாரி ஆகும். இப்படத்தில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்குகிறார். இவர் ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். இந்த படத்தின் திரை எழுத்தாளர் தொல்காப்பியன் ஆவார். தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், மயில் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் காமெடி ஹாரர் என கூறப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக்

ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்தை பற்றி பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் இரண்டு கதாபாத்திரங்களில், ஒரு கதாபாத்திரம் பழங்குடியின பெண் என்று கூறப்படுகிறது. இது கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் முத்து கணேஷ் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை தந்து வரும் இந்த இயக்குநனரின் காந்தாரி படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.