
விவாகரத்துக்கு தயாராகிறாரா ஹன்சிகா? - கோலிவுட் வட்டாரத்தில் பரவும் செய்தி
செய்தி முன்னோட்டம்
தனுஷுடன் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஹன்சிகா, திருமணத்திற்கு பின் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தற்போது, அவரும் அவரது கணவர் சோஹைல் கத்தூரியாவும் விரைவில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் விவாகரத்து செய்தி அவ்வப்போது வெளியானாலும், கணவர் சோஹைல் அதை மறுத்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது கணவர் உடன் இருக்கும் புகைப்படங்களையும், திருமண புகைப்படங்களையும் ஹன்சிகா நீக்கியதே தற்போது மீண்டும் பரபரப்பை தூண்டியதன் காரணம்.
திருமணம்
ஜெய்ப்பூரில் திருமணம், ஹாட்ஸ்டாரில் ஆவணப்படம்!
2022ம் ஆண்டு, ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம், ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றதோடு, பின்னர் ஒரு ஆவணப்படமாக ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. சோஹைல் தனது முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்ற பின், ஹன்சிகாவை இரண்டவதாக திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் மனைவி ஹன்சிகாவின் தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு சுமார் மூன்று ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த ஜோடி, தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழும் நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹன்சிகா தற்போது தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.