
தளபதி 69 பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் GOAT திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் பற்றிய யூகங்கள் வெளியான வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இணையத்தில் கசிந்த தகவலின்படி, விஜய் அடுத்ததாக ஹெச்.வினோத் உடன் கைகோர்க்க உள்ளார்.
சமூகநீதி சார்ந்த படங்களை எடுத்து வரும் வினோத், விஜய் உடன் இணைவதால், அவருடைய அரசியல் என்ட்ரிக்கும் மிகப்பெரிய பூஸ்ட் தரும் கதைக்களத்தை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் என செய்திகள் வெளிவருகின்றன.
அதோடு இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெறி, கத்தி உள்ளிட்ட படங்களுக்கு பின்னர் நான்காவது முறையாக இந்த ஜோடி இணையவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
#தளபதி 69 அறிவிப்பு
#LetsCinema EXCLUSIVE: #Thalapathy69 featuring Thalapathy Vijay & Samantha, directed by H Vinoth, with music by Anirudh, produced by KVN Productions. pic.twitter.com/LAlwDWosli
— LetsCinema (@letscinema) July 1, 2024