Page Loader
மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' திரைப்படம்

மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' திரைப்படம்

எழுதியவர் Sindhuja SM
Mar 17, 2024
06:34 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். என்பவரது இயக்கத்தில் 'ரிபெல்' என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், மமிதா பைஜு கருணாஸ், ஷாலு ரஹீம், வெங்கடேஷ் , ஆதித்யா, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படம் வெளியாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது 'ரிபெல்'