Page Loader
'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்
இதுகுறித்து கட்டமான அறிக்கை ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்

'பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது': ஜிவி பிரகாஷ் ஆதங்கம்

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2024
03:26 pm

செய்தி முன்னோட்டம்

தாங்கள் கருத்து வேறுபாடு காரணமாக மனமொத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் அறிவித்தனர். அவர்கள் விவகாரத்திற்கான காரணம் பொதுவெளியில் குறிப்பிடாத நிலையில், சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பலவித யுகங்கள் வெளியாயின. இந்த நிலையில் இதுகுறித்து கட்டமான அறிக்கை ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில்,"புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?"எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

embed

ஜிவி பிரகாஷ் ஆதங்கம்

pic.twitter.com/FI5pnEOblL— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024