ஷங்கர் மகாதேவன், ஜாகிர் ஹுசைனின் 'சக்தி' இசைக்குழுவிற்கு கிராமி விருது
செய்தி முன்னோட்டம்
ஜான் மெக்லாலின், ஜாகிர் ஹுசைன், பாடகர் ஷங்கர் மகாதேவன், தாள கலைஞர் வி செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய ஃபியூஷன் இசைக்குழுவான 'சக்தி', பிப்ரவரி 5 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Crypto.com அரங்கில் நடைபெற்ற கிராமி விருதுகளில் உலகளாவிய இசை ஆல்பத்தை வென்றது.
'சக்தி' இசைக்குழுவின் சமீபத்திய வெளியீடான 'திஸ் மொமென்ட்' ஆல்பத்திற்காக 'உலகளாவிய இசை ஆல்பம்' என்ற கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
45 ஆண்டுகளுக்கு பிறகு, 'சக்தி' இசைக்குழு வெளியிட்ட முதல் ஆல்பம் இது என்பதால், இது ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
கிராமி விருது
'சக்தி' இசைக்குழுவின் மிகப்பெரும் வெற்றி
ஜான் மெக்லாலின் (கிட்டார், கிட்டார் சின்த்), ஜாகிர் ஹுசைன் (தபேலா), ஷங்கர் மகாதேவன் (பாடகர்), வி செல்வகணேஷ் (தாளக்கலைஞர்), மற்றும் கணேஷ் ராஜகோபாலன் (வயலின் கலைஞர்) ஆகியோர் அடங்கிய திறமையான இசைக்குழுவின் எட்டு புதிய இசையமைப்புகளை இந்த ஆல்பம் கொண்டுள்ளது.
சுசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ போன்ற கலைஞர்களினால் கடுமையான போட்டியை எதிர்கொண்ட சக்தி, சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதைப் பெற்று வெற்றி பெற்றது.