மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
குட்நைட் திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படமான 'லவ்வர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
காதல் டிராமாவாக உருவாகி உள்ள இப்படத்தை, லிவ்வின் திரைப்படத்தை இயக்கிய, பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.
படத்தில் ஹீரோயினாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். படத்தின் இசை வேலைகளை சீன் ரோல்டன் கவனிக்கிறார்.
குட்நைட் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் அதே பேனரில் இப்படத்தையும் தயாரிக்கின்றன.
முன்னதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
படம் அடுத்த ஆண்டு, காதலர் தினத்தன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
'லவ்வர்' திரைப்படத்தின் டீசர்
LOVE IS WAR, Isn’t it ? #Lover Teaser - https://t.co/kPze06UZap
— Manikandan Kabali (@Manikabali87) December 24, 2023
Directed by @Vyaaaas
A @RSeanRoldan musical !! @srigouripriya @iamkannaravi @kshreyaas @barathvikraman @thinkmusicindia @MillionOffl @Yuvrajganesan @mageshraj @mrp_entertain @proyuvraaj pic.twitter.com/ywvHX1mK8H