DD ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் சந்தானத்திற்கு, GOAT பட நாயகி ஜோடி
சந்தானம் நடிப்பில் உருவான 'தில்லுக்கு துட்டு' என்ற ஹாரர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ச்சியாக அதே பெயரில் வரிசையாக ஹாரர்-காமெடி படம் நடித்து வந்தார் சந்தானம். அவை அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் சென்ற ஆண்டு, 'DD ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்திருந்தார். இப்படம் அமோக வெற்றியடைந்தை தொடர்ந்து, அடுத்ததாக 'DD ரிட்டர்ன்ஸ்-2' எடுக்க தயாராகிவிட்டார் அப்படத்தின் இயக்குனர் பிரேமானந்த். அதிலும் சந்தானம் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக GOAT பட நாயகி மீனாட்சி சவுதிரி நடிக்கவுள்ளார் என சமூக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்தினை ஆர்யா தயாரிக்கவுள்ளாராம்.