Page Loader
ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஷங்கர்- ராம் சரண் 'கேம் சேஞ்சர்' குழு; விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விரைவில் படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்

ஷூட்டிங்கை நிறைவு செய்தது ஷங்கர்- ராம் சரண் 'கேம் சேஞ்சர்' குழு; விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2024
09:25 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணுடன் இணைந்து உருவாகி வரும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக இது பற்றி முன்னமே, இந்தியன் 2 ப்ரோமோஷனின் போது இயக்குனர் ஷங்கர் தெரிவித்திருந்தார். இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக நேரடியாக தெலுங்கு படத்தை இயக்குவது இதுவே முதன்முறை. கொரோனா காலகட்டத்தில் (2021) அறிவிக்கப்பட்ட இந்த கேம் சேஞ்சர் திரைப்படம், பல தடைகளை தாண்டி தற்போது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 ஷூட்டிங்கின் போதே, இப்படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வந்தார் ஷங்கர். இப்படத்தில் ராம்சரணுடன், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஷூட்டிங்கை நிறைவு செய்த 'கேம் சேஞ்சர்'

கதைகரு

தேர்தல் அதிகாரி வேடத்தில் ராம் சரண்

'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் ராம் சரண் ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் என செய்திகள் குறிப்பிடுகின்றன. முன்னதாக இப்படத்தில், இப்படத்தில் நடித்தபோது தான் SJ சூர்யாவிற்கு இந்தியன் 2 வாய்ப்பு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய பெயரை ஷங்கரிடம் சிபாரிசு செய்ததும் ராம் சரண் என அவர் கூறியிருந்தார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளது தமன். ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் வெளியாகியள்ளது. படத்தின் பிரதான படப்பிடிப்பு நியூஸிலாந்து, ஹைதராபாத், ஆந்திர பிரதேசம் மற்றும் மும்பையில் நடைபெற்றது. படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.