Page Loader
விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு 
விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு

விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு 

எழுதியவர் Nivetha P
Aug 05, 2023
03:42 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை அருகே பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று(ஆகஸ்ட்.,5)நடைபெற்றது. அதன்படி, இந்த ஆலோசனைக்கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தங்கள் இயக்கத்தின்மீது வழக்குகள் தொடரப்பட்டால், அதனை சட்டரீதியாக அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். விரைவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுமா? என்னும் கேள்விக்கு புன்னகைத்து விட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி