NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்
    ரிங்கி சக்மா, 2017இல் மிஸ் இந்தியா போட்டியில் 'Beauty with a Purporse' விருதைப் பெற்றார்

    முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 01, 2024
    01:40 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா, ரிங்கி சக்மா புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 28.

    கடந்த மாதம், ரிங்கி சக்மா, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.

    முன்னாள் மிஸ் இந்தியா திரிபுரா அழகியான ரிங்கி சக்மா கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி காலமானார்.

    இது சார்ந்து ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவரால் அந்த நோயிலிருந்து மீளமுடியாமல் இறந்துபோனார்.

    ரிங்கி சக்மா இறப்பை குறித்து ஃபெமினா மிஸ் இந்தியா நிறுவனம், சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளது.

    அதில், சக்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, 'இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கல்' என குறிப்பிட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    முன்னாள் திரிபுரா அழகி ரிங்கி சக்மா

    Former Miss India Rinky Chakma passes away at 28 following her battle with cancer

    Read More: https://t.co/JD367TQij1

    — Miss India (@feminamissindia) March 1, 2024

    card 2

    மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரிங்கி 

    கடந்த மாதம், ரிங்கி சக்மா தனது நோய் பற்றி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.

    தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக அப்போதுதான் அவர் வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார்.

    அவர் நீண்ட காலமாக தனியாக போராடி வருவதாகவும், தனது உடல்நிலை குறித்து யாரிடமும் சொல்ல விரும்பவில்லை என்றும் அந்த பதிவில் கூறினார்.

    அந்த பதிவில் சக்மா, தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கூறினார்.

    இதற்காக அறுவை சிகிச்சை செய்த பிறகும், புற்றுநோய் அவரது நுரையீரலிலும், பின்னர் அவரது தலையிலும் பரவியிருப்பதாக தெரிவித்தார்.

    "என் மூளை அறுவை சிகிச்சை இன்னும் நிலுவையில் உள்ளது. ஏனெனில் இது ஏற்கனவே என் நுரையீரல் வரை, என் உடலின் வலது பக்கம் முழுவதும் பரவி உள்ளது" என்று அவர் கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மிஸ் இந்தியா
    புற்றுநோய்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    மிஸ் இந்தியா

    மிஸ் வேர்ல்ட் 2023: இந்தியா சார்பில் போட்டியிடும் சினி ஷெட்டி பற்றி சில தகவல்கள் மிஸ் வேர்ல்ட்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025