Page Loader
சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்!
A.R. ரஹ்மான் இசையில் 'பத்து தல' படத்தின் முதல் பாடல் வெளியானது

சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 03, 2023
09:37 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தின் முதல் பாடலான 'நம்மசத்தம்' இன்று வெளியானது. பென் ஸ்டுடியோசுடன் இணைந்து ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை யோகி சேகருடன் இணைந்து ரஹ்மான் பாடியுள்ளார். பாடலை எழுதியவர் விவேக். பாடலுக்கு நடனம் அமைத்தவர் சாண்டி. இந்த படத்தில், சிம்புவிற்கு ஒரு கேங்ஸ்டர் வேடம் என கூறப்படுகிறது. கன்னட படமான 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக வெளிவரும் இந்த 'பத்து தல' படத்தை இயக்குவது, ஒபலி என்.கிருஷ்ணா ஆவார். இவர், 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில், சிம்புவிற்கு நிகரான பாத்திரத்தில், கவுதம் கார்த்திக்கும், இயக்குனர் கவுதம் மேனனும் நடித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

பத்து தல திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் டிராக்