Page Loader
ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2023
01:23 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள சினிமாவின் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவின் மறைந்த முதல்வர் YSR-இன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'யாத்ரா' என்ற படத்தில், YSR கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். YSR-இன் பிரபலமான பாதயாத்திரையுடன் முடிவடைந்த முதல் பாகத்தை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் எடுத்து வருகிறார்கள். 'யாத்ரா-2' என பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தில், தமிழ் நடிகர் ஜீவா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எனக்கூறப்பட்டது. இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதனை தொடர்ந்து, தற்போது தெலங்கானாவின் முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் தான் ஜீவா நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் பலரும் யூகித்து வருகின்றனர். மஹி.வி. ராகவ் என்பவர் இயக்கும் இத்திரைப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்