
நடிகர் ஆதி நடித்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
'ஈரம்' படத்தினை தொடர்ந்து நடிகர் ஆதி மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'சப்தம்'.
ஆல்பா பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
த்ரில்லர் கதைகளை தனக்கான களமாக கொண்டு அதில் வெற்றிபெற்று வந்த இயக்குனர் அறிவழகன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
'ஈரம்' திரைப்பட இசையமைப்பாளர் தமன் தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'ஈரம்' வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பர்ஸ்ட் லுக் போஸ்டர்
#CinemaUpdate | அறிவழகன் இயக்கத்தில் ஆதி, சிம்ரன், லைலா உள்ளிட்டோர் நடிக்கும் ‘சப்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!#SunNews | #Sabdham | @AadhiOfficial | @dirarivazhagan | @SimranbaggaOffc pic.twitter.com/JFwXRwJRv3
— Sun News (@sunnewstamil) December 14, 2023