Loading...
ராமாயணம் படத்தின் மும்பை படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; பதறிய படக்குழு; முழு விபரம்
ரன்பீர் கபூரின் ராமாயணம் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து

ராமாயணம் படத்தின் மும்பை படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; பதறிய படக்குழு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
07:47 pm

செய்தி முன்னோட்டம்

மும்பையில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. ப்ரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் ஒன்றில் இந்த தீ விபத்து நேரிட்டது. அதிர்ஷ்டவசமாகத் தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், படப்பிடிப்பு தளத்தில் இருந்த எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இத்தகவலை மேற்கு இந்திய திரை ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.என்.திவாரி உறுதி செய்துள்ளார்.

எச்சரிக்கை

தயாரிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை

சமீபத்தில் அருகில் உள்ள மற்றொரு படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் உரியப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கவனக்குறைவு காரணமாகவே இந்த தீ விபத்து நடந்துள்ளதாக பி.என்.திவாரி சுட்டிக்காட்டினார்.

அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆரம்பக்கட்ட பரபரப்பு அடங்கிய பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

மேலும் இச்சம்பவம் மற்ற படக்குழுவினருக்கும் ஒரு பெரிய எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ரிலீஸ் தேதி

பிரமாண்ட ராமாயணம் படத்தின் ரிலீஸ் விவரங்கள்

இந்த தீ விபத்து சம்பவத்திற்கு நடுவே, ராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகத்தின் தலைப்பைத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு 'ராமாயணம்: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புதிய போஸ்டர் உடன் வெளியான இந்த அறிவிப்பில், படம் நவம்பர் 6 அன்று இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3D, IMAX மற்றும் பிரீமியம் திரைகளில் இப்படம் பிரம்மாண்டமாகத் திரையிடப்படவுள்ளது.

ADVERTISEMENT

தயாரிப்பு 

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தயாரிப்பு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், கன்னட நடிகர் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர்.

மேலும் சீதையாக சாய் பல்லவி, இலக்குவனாக ரவி துபே, ஹனுமானாக சன்னி தியோல், தசரதனாக அருண் கோவில் மற்றும் சூர்ப்பணகையாக ரகுல் பிரீத் சிங் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடிக்கிறது.

"மனிதகுலத்தின் மிகச்சிறந்த காவியம் உயிர்பெறுகிறது" என்ற டேக்லைனுடன் வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT