'ஃபைட் கிளப்' வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
கோலிவுட்: உரியடி திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்த விஜயகுமாரின் மூன்றாவது திரைப்படம் ஃபைட் கிளப் ஆகும். கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், ஷங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம் மற்றும் சரவண வேல் உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் இதுவரை ரூ.5 கோடியே 75 லட்சத்திற்கும் மேலாக வசூல் செய்துள்ளது இதனையடுத்து, இப்படத்தின் வெற்றியை ஃபைட் கிளப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.