Page Loader
பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்
கோலிவுட் நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் மரணம்

பிரபல குணசித்திர நடிகர் E .ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2023
01:15 pm

செய்தி முன்னோட்டம்

பல தமிழ் படங்களில், குணச்சித்திர வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகர் E .ராமதாஸ், நேற்று இரவு (ஜனவரி 23) மாரடைப்பால் காலமானார். சென்னை, கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. கோலிவுட்டில், நடிகராக மட்டுமின்றி, எழுத்தாளராகவும், ராமதாஸ் பணிபுரிந்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான வசூல் ராஜா MBBS படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர், பின்னர் விசாரணை, காக்கி சட்டை, மாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம், விஷால் நடிப்பில் உருவான, 'லத்தி' ஆகும். இவரின் திடீர் மறைவு, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இறப்புக்கு, திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

குணசித்திர நடிகர் E .ராமதாஸ் காலமானார்