Page Loader
பிரபல திரைப்பட நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார் 
1980களில் ஒரு முக்கிய நடிகராக அறியப்பட்டவர் இவர் ஆவார்.

பிரபல திரைப்பட நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார் 

எழுதியவர் Sindhuja SM
Nov 11, 2023
09:46 am

செய்தி முன்னோட்டம்

டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகிய 'உயிருள்ள வரை உஷா' என்ற வெற்றி திரைப்படத்தில் கதாநாயனாக நடித்திருந்த பிரபல திரைப்பட நடிகர் கங்கா, தனது 63வது வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பி.மாதவன் இயக்கத்தில் வெளியாகிய 'கரையை தொடாத அலைகள்', விசு இயக்கிய 'மீண்டும் சாவித்திரி' போன்ற பல வெற்றி படங்களில் நடித்து, 1980களில் ஒரு முக்கிய நடிகராக அறியப்பட்டவர் இவர் ஆவார். அது போக, பல திரைப்படங்களில் அவர் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 63 வயது வரை திருமணம் செய்யாமல் தனது சகோதரரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த அவர், மாரடைப்பால் காலமானார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்